கொடிநாள் நிதி - ஆட்சியர் துவக்கி வைத்தார்
கொடிநாள் நிதிவசூல் பணியினை மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா துவக்கி வைத்தார்.
By : King 24x7 Website
Update: 2023-12-07 17:11 GMT
ஆண்டுதோறும் டிசம்பர் திங்கள் 7-ம் நாள் நாடு முழுவதும் படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட ஆட்சித்தலைவரால் படைவீரர் கொடிநாள் நிதிவசூல் பணி துவக்கி வைக்கப்படுகிறது. அதன்படி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா உண்டியலில் நிதி செலுத்தி படைவீரர் கொடிநாள் நிதி வசூலிளை துயக்கி வைத்தார். மேலும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் தொகுப்பு நிதியிலிருந்து முன்னாள் படைவீரர் மற்றும் அவரைச் சார்ந்தோர்களின் குழந்தைகளுக்கு 55 நபர்களுக்கு ரூ.13,24,380 கல்வி நிதியுதவியும் மற்றும் பல்வேறு நிதியுதவியாக 239 நபர்களுக்கு ரூ.28. 13 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போல, இந்த வருடமும் அதிக அளவில் கொடிநாள் நிதி வசூல் செய்திட வேண்டும் என்று அனைத்துத் துறை அலுவலர்களையும் மற்றும் தாராளமாக நிதி வழங்குமாறு பொதுமக்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டார்.