மாசித்திருவிழா கொடியேற்றம்: 28-ம் தேதி தேரோட்டம்!

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.  வரும் 28-ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

Update: 2024-02-21 05:57 GMT

மாசித்திருவிழா கொடியேற்றம்

நவதிருப்பதி கோவில்களில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், திருமஞ்சனம், தீர்த்த விநியோக கோஷ்டி நடைபெற்றது. தொடர்ந்து காலை 6 மணிக்கு சுவாமி நம்மாழ்வார் கொடிமரம் முன்பாக எழுந்தருளினார்.  காலை 6.30 மணிக்கு கொடிப்பட்டம் மாட வீதிகளில் சுற்றி வலம் வந்து சுவாமி நம்மாழ்வார் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். வருகிற 24-ம் தேதி கருட வாகனத்தில் சுவாமி பொலிந்துநின்ற பிரானும், ஹம்ச வாகனத்தில் சுவாமி நம்மாழ்வாரும் எழுந்தருளும் திரு வீதி உலா நடைபெறும். வருகிற 28-ம் தேதி சிகர நிகழ்வான 9-ஆம் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறும். மறுநாள் இரவில் சுவாமி பொலிந்துநின்ற பிரான் எழுந்தருளும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. மார்ச் 1-ம் தேதி இரவில் சுவாமி நம்மாழ்வார் ஆச்சார்யர்களுடன் எழுந்தருளும் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.
Tags:    

Similar News