அற்புத அந்தோணி ஆலயத்தில் தேரோட்டத்திற்கான கொடியேற்ற நிகழ்வு
தனக்கன்குளம் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த அற்புத அந்தோணி ஆலயத்தில் தேரோட்டத்திற்கான கொடியேற்ற நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.
40 ஆண்டுகள் பழமை வாய்ந்த அற்புதர் அந்தோணி ஆலயத்தில் - ஒரு நாள் நடைபெறும் திருத்தேரோட்டாத்திற்காண கொடி ஏறியது - ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிராத்தனை மதுரை தனக்கன்குளத்தில் 1982ஆம் ஆண்டில் கட்டப்பட்ட 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோடி அற்புதர் அந்தோனியர் பள்ளி உள்ளது. கோடி அற்புதர் அந்தோனியார் பள்ளியில் மிகவும் விசேஷமாக நடைபெறும் ஒரு நாள் கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது.இந்த திருவிழாவில் ஒன்பது அருட்செல்வர் உடன் இணைந்து பாதர் ராக் கலந்து கொண்டு திருத்தேரைட்டத்திற்கான கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
இடிபாடு நிலையிலிருந்து கோடி அற்புதர் அந்தோணியார் கிறிஸ்தவ ஆலயத்தை அங்குள்ள கிறிஸ்தவர்கள் உதவியுடன் முழுவதுமாக புணர் அமைக்கப்பட்டு மிகவும் விசேஷமாக 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு உலக நன்மை வேண்டியும், நாட்டின் பொருளாதாரம் செழிக்க வேண்டியும் கிறிஸ்தவர்கள் மற்றும் அருட்செல்வர்கள் பிரார்த்தனை மேற்கொண்டனர். மேலும், பள்ளியை புனரமைப்பில் ஈடுபட்டவருக்கும் கொடியேற்றத்தில் கலந்து கொள்ள வந்த அருள் செல்வர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார் பாதர் ஜார்ஜ் எட்வின். பின்னர் பிரார்த்தனையில் ஈடுபட்ட பக்தர்களுக்கு கிறிஸ்துவ ஆலயத்தின் சார்பாக பிரசாதங்கள் வழங்கப்பட்டது.