மேகமலை அருவியில் திடீர் வெள்ள பெருக்கு - உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்

மேகமலை அருவியில் திடீரென கடுமையான வெள்ளபெருக்கு ஏற்பட்டு அருவியில் இருந்து 1கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடி அருகேயுள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் சீறிப்பாய்ந்தது. வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு நடந்து வந்த சுற்றுலாபயணிகளுக்கு ஆபத்தின்றி காப்பாற்றிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.;

Update: 2024-05-15 08:59 GMT

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கோம்பைதொழு அருகே வனப்பகுதியில் மேகமலை அருவி அமைந்துள்ளது இங்கு வரும் சுற்றுலாபயணிகள் அருவியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் முன்பாக உள்ள சோதனை சாவடி அருகிலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு அருவிக்கு நடந்து சென்று குளித்து விட்டு வருவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் 20 க்கும் மேற்பட்ட சுற்றுலாபயணிகள் அருவியில் குளித்து விட்டு வனத்துறை சோதனைசாவடி அருகே உள்ள தரைப்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென மலைப்பகுதிகளில் கொட்டிய கனமழையால் அருவியில் தண்ணீர்வரத்து பல மடங்கு அதிகரித்து வனத்துறை சோதனைசாவடிக்கு முன்பாக தரைப்பாலத்தை மூழ்கடித்து சீரிப்பாய்ந்தது தண்ணீர் அதிகமாக வரப்போவதை முன்பாகவே அறிந்த பாதுகாப்பில் இருந்த வனத்துறை அதிகாரிகள் பத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை பாலத்தில் இருந்து பாதுகாப்பாக பாலத்திற்கு மேல் பகுதியில் விரட்டி அங்கேயே காத்திருக்க வைத்தனர்

Advertisement

அதில் வந்த மீதி பத்துக்கும் மேற்பட்டோர் சோதனை சாவடியில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டனர் இதையடுத்து ஒரு மணி நேரத்திற்கு பின்னர் தண்ணீர் வரத்து சற்று குறைந்த பின்னர் பாதுகாப்பாக பாலத்தை கடந்து செல்ல வைத்து சுற்றுலாபயணிகளை வனத்துறையினர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர் தண்ணீர் வரும் சமயத்தில் சுற்றுலாபயணிகள் பாலத்திலேயே நடந்து வந்து கொண்டிருந்த நிலையில் வனத்துறை துரிதமாக செயல்படாவிட்டால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் வனத்துறை அதிகாரிகளின் சரியான பாதுகாப்பு பணியால் அங்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு பத்திரமாக வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News