வெள்ள பாதிப்பு : தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுவினர்.
திருவட்டாரில் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதியில் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
Update: 2024-05-19 05:50 GMT
குமரி மாவட்டத்துக்கு கன மழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தேவையான முன் னெச்சரிக்கை நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் மழை வெள்ளம் ஏற்பட்டால் வெள்ளத்தில் மூழ்கும் பகுதி மக்களை மீட்பதற்கு பேரிடர் மீட்பு குழுவினர் இதற்காக மீட்பு உபகரணங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. திருவட்டார் பகுதியில் முகாமிட்டுள்ள பேரிடர் மீட்பு குழுவினர் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளுக்கு செல்ல முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கயிறு கள், லைப் ஜாக்கெட், மரம் அறுக்கும் எந்திரம், மிதவைகள் போன்ற உபகரணங்கள் தயார் நிலையில் எடுத்து வைக்கப்பட்டுள்ளன.