வெள்ள அபாயம் : காளிகேசம் காளி கோவிலில் பக்தர்களுக்கு தடை
வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் காளிகேசம் காளி கோவிலுக்கு வரும் 23ம் தேதி பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
Update: 2024-05-21 13:10 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காளிகேசம் அருள்மிகு காளியம்மன் கோவிலில் உள்ளது. இந்த கோவிலில் பௌர்ணமி பூஜை வருகின்ற 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தற்போது மாவட்டம் முழுவதும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என அறிவிப்பு ஏற்கனவே உள்ளது. எனவே காளிகேசம் காளி கோவில் அருவியை ஒட்டி உள்ளதால், விழாவுக்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என குமரி மாவட்ட வனத்துறை அலுவலர் உத்தரவின் பெயரில் அழகியபாண்டிபுரம் ரேஞ்சர் மணிமாறன் கேட்டுக் கொண்டுள்ளார்.