குமரி மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது

Update: 2023-12-17 09:38 GMT
வெள்ள அபாய எச்சரிக்கை
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை - 2023 காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், அதிகப்படியான நீரினை வெளியேற்றுவதில் ஏற்படும் இடர்பாடுகளைக் கருத்தில் கொண்டு, பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணை அணைகளின் நீரினை, இன்று (17.12.2023) காலை 09.30 மணிக்கு பேச்சிப்பாறை அணையிலிருந்து 3000 கனஅடி நீரும், பெருஞ்சாணி அணையிலிருந்து 1000 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.      மேலும் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மேலும் கூடுதலாக நீர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது. எனவே, தாமிரபரணி ஆறு மற்றும் இதர ஆறுகளின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ செல்ல வேண்டாம் என்றும், மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News