வெள்ளப்பெருக்கு : ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்களுக்கு தடை

பொள்ளாச்சி வால்பாறை சாலையில் உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-22 07:34 GMT

 தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக ஆழியார் குரங்கருவி எனப்படும் கவியருவி உள்பட பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.. இந்த நிலையில் பொள்ளாச்சி வால்பாறை சாலையில் உள்ள பாலாற்றின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயில் வழியாக பாலாறு உப்பாறு உள்ளிட்ட மற்றும் சிற்றார் ஓடைகளில் இருந்து வரும் தண்ணீர் கடந்து செல்கிறது.

மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக இப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது இதனை அடுத்து வழிபாடு செய்ய பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மேலும் கோவிலுக்கு அருகில் யாரும் செல்லாமல் இருக்க கோவில் முன்பகுதியில் தடுப்பு கம்பிகளை வைத்து அடைத்துள்ளனர்..மழை வெள்ள நீர் முழுவதும் வடிந்த பிறகு மழை இல்லை என்றால் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News