ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு ஆயிரம் கன அடியாக நீர்வரத்து சரிந்துள்ளது.

Update: 2024-06-15 02:11 GMT
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி மற்றும் வட்டத்துக்கு உட்பட்ட வட்டத்துக்குட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் நீர்வரத்து 1300 கனஅடியாக வந்து கொண்டிருந்த நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பொழிந்து வரும் மழையின் அளவு குறைந்தது. இதனை அடுத்து நேற்று ஜூன் 14 மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு ஆயிரம் கன அடியாக சரிந்தது. தொடர்ந்து தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான பீலிகுண்டலுவில் தொடர்ந்து மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் நீரின் அளவை கண்காணித்து வருகின்றனர்.
Tags:    

Similar News