பயணிகள் அமரக்கூடிய இருக்கைகளில் பூ மூட்டைகள் பயணம்
திண்டுக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் ஏசி அரசு பேருந்தில் பயணிகள் இருக்கைகளில் பூ மூட்டைகள் அடுக்கி வைத்து திருச்சி வரை கொண்டு செல்கின்றனர்.
Update: 2024-06-15 11:37 GMT
திண்டுக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் குளிரூட்டப்பட்ட அரசு பேருந்தில் ஓட்டுநருக்கு பின்புறம் உள்ள 3 இருக்கைகளில் இன்று பூ மார்க்கெட்டில் இருந்து ஏறத்தாழ பத்துக்கும் மேற்பட்ட பூ மூட்டைகள் அடுக்கி வைத்து திருச்சி வரை கொண்டு செல்கின்றனர். பயணிகள் அமரக்கூடிய இருக்கைகளில் அமர்வதற்கு இடமில்லாமல் இப்படி பூ மூடைகளை கொண்டு செல்ல நிர்வாகம் அனுமதித்துள்ளது.