மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் பூக்கள் விலை சரிவு !!!

திருப்பூர் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் பூக்கள் விலை சரிவு ஏற்பட்டுள்ளது.;

Update: 2024-05-11 11:29 GMT
மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் பூக்கள் விலை சரிவு !!!

பூக்கள

  • whatsapp icon
திருப்பூர் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் பூக்கள் விலை சரிவு. திருப்பூர் பூ மார்க்கெட்டிற்கு தற்போது பூக்களின் வரத்து வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. சத்தியமங்கலம் நாமக்கல் ஆகிய இடங்களில் இருந்து மார்க்கெட்டிற்கு தினமும் சுமார் 5 டன் மல்லிகைப்பூ வரத்து உள்ளது. இதனால் கடந்த காலத்தை விட இதன் விலை வெகுவாக குறைந்துள்ளது. தற்போது ஒரு கிலோ மல்லிகை பூ ரூ 250க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முல்லைப்பூ ரூ. 200,சம்பங்கி ரூ. 240,ரோஜாப்பூ ரூ. 160 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. பெரும்பாலான பூக்களில் விலை மிகவும் குறைவாக இருப்பதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். இதில் செவ்வந்தி பூவின் வரத்து குறைவாகஇருப்பதால் அவை மட்டும் ரூ. 300 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News