உலக பட்டினி தினத்தையொட்டி ஏழை மக்களுக்கு அன்னதானம்
விழுப்புரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உலக பட்டினி தினத்தையொட்டி ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.;
Update: 2024-05-30 17:32 GMT
அன்னதானம் வழங்கல்
உலக பட்டினி தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழக விழுப்புரம் மாவட்ட இளைஞரணி தலைமை சார்பில் விழுப்புரம், விக்கிரவாண்டி, மயிலம், செஞ்சி, திண்டிவனம், வானூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய் ஜி.பி.சுரேஷ் கலந்துகொண்டு ஏழை, எளிய மக்கள் 3 ஆயிரம் பேருக்கு அன்ன தானம் வழங்கினார். இதில் விழுப்புரம் தொகுதி நிர்வாகிகள் சுரேஷ், பிரபு, சபரிஹாசன், செந்தில் குமார், விக்கிரவாண்டி தொகுதி நிர்வாகிகள் வசந்த், சிவமூர்த்தி, மணி, மயிலம் தொகுதி நிர்வாகிகள் மணிகண்டன், விமலநாதன், சங்கர், சிவா, ராஜ்குமார், திண்டிவனம் தொகுதி நிர்வாகிகள் சுமன்ராஜ், பழனி, ஆனந்த், தினேஷ், இதய ராஜ், குப்புசாமி, பிரேம்குமார், வானூர் தொகுதி நிர்வாகிகள் வேந்தன், கார்த்திக், வினோத், மகளிர் அணி சுமதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.