வெல்லம் தயாரிப்பு ஆலைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் திடீர் ஆய்வு.
பரமத்தி வேலுர் பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் மேற்கொண்ட திடீர் ஆய்வில் 1300 கிலோ அஸ்கா சர்க்கரை பறிமுதல் செய்யப்பட்டது.;
Update: 2024-06-30 02:16 GMT
உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, கபிலர்மலை ஒன்றியம், பிலிக்கல்பாளையம் பகுதிகளில் இயங்கும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் தனிநபர் புகாரின் அடிப்படையில் கபிலர்மலை மற்றும் பரமத்திவேலூர் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி கொந்தளம் அருகே நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கொந்தளம் அருகே உள்ள சுண்ணாம்பள்ளி மேடு பகுதியில் இயங்கி வந்த வெல்லம் தயாரிக்கும் ஆலையில் கலப்படத்திற்காக வைக்கப்பட்டிருந்த 1,300 கிலோ அஸ்கா சக்கரை பறிமுதல் செய்யப்பட்டு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் வேதிப்பொருட்கள் மற்றும் அஸ்கா சக்கரையை கலப்படம் செய்யக்கூடாது எனவும் மீறி கலப்படம் செய்வது தெரியவந்தால் கடுமையான எடுக்கப்படும் எனவும் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.