சிவகங்கையில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சிவகங்கையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
By : King 24X7 News (B)
Update: 2024-06-22 14:17 GMT
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத்தலைவர் பாண்டி தலைமை வகித்தார். முன்னாள் மாநிலத்தலைவர் பாண்டி தொடக்கவுரையாற்றினார்.
மாவட்டச்செயலர் லதா கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். சத்துணவு மையங்களில் உள்ள 60 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தேர்தல் கால வாக்குறுதியின்படி சத்துணவு ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
காலை உணவுத்திட்டத்தை விரிவு படுத்தி அத்திட்டத்தை சத்துணவு ஊழியர்களைக் கொண்டு செயல் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.