கிளாம்பாக்கத்தில் நடை மேம்பாலப்பணி துவக்கம்
கிளாம்பாக்கத்தில் நடை மேம்பாலம் அமைப்பதற்கான பணியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
Update: 2024-03-12 13:41 GMT
இன்று (12.03.2024) ஜி.எஸ்.டி. சாலையின் குறுக்கே கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் கிளாம்பாக்கம் இரயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் ரூ.79 கோடி மதிப்பீட்டில் 220 மீட்டர் நீளத்தில் புதிய நடைமேம்பாலம் அமைப்பதற்கான பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்து மற்றும் இம்முனையத்தில் 6 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.80 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நீரூற்றுகளுடன் கூடிய புதிய பூங்காவை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர் போக்குவரத்துக் குழுமம் (CUMTA) சிறப்பு அலுவலர் ஐ.ஜெயக்குமார், ஐ.ஆர்.டி.எஸ்., தலைமை நிர்வாக அலுவலர் (ம) மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்தீபன், கண்காணிப்பு பொறியாளர் (பொ) பாலமுருகன், செயற்பொறியாளர் ராஜன்பாபு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.