பிரதான கூட்டு சாலைகளை விரிவுப்படுத்துவதற்கு...கணக்கெடுப்பு!

பிரதான கூட்டு சாலைகளை விரிவுப்படுத்துவதற்கு கணக்கெடுப்பு விபத்தை தடுக்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2024-06-14 06:26 GMT

கணக்கெடுப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிரதான கூட்டுசாலைகளை விரிவுப்படுத்தும் பணிக்காக, நெடுஞ்சாலைத் துறையினர் கணக்கெடுக்கும் பணியை துவக்கி உள்ளனர். விபத்தை தடுக்க, நிதி ஒதுக்கீட்டிற்கு ஏற்ப, சாலை விரிவாக்க பணிகள் துவக்கப்படும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இரு மாவட்டங்களிலும், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட சாலை, இதர சாலை என, மொத்தம், 2,253 கி.மீ., துார சாலைகள் உள்ளன. இதுதவிர, 1,292 கி.மீ., ஒன்றிய சாலைகள், 1,694 கி.மீ., துாரம் ஊராட்சி சாலைகள் என, மொத்தம் 5,239 கி.மீ., துார சாலை வகைப்பாடுகள் உள்ளன.

விரிவுபடுத்தும் பணி கடந்த, 2021ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் அலுவலகம், காஞ்சிபுரம் கலெட்க்ரேட் பின் புற பகுதியில் இயங்கி வருகிறது, இங்கு, 1,122 கி.மீ., துார சாலைகள் மட்டுமே உள்ளன. இதில், வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும், சாலைகளில் துறை சார்ந்த திட்டத்தில், சாலை விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.

உதாரணமாக, பள்ளூர் - சோண்டி இடையே, ஒருவழி சாலையை, 41 கோடி ரூபாய் செலவில், மேம்படுத்தப்பட்ட இருவழி சாலையாக விரிவுபடுத்தப்பட்டு உள்ளன. அதேபோல, சென்னை - பெங்களூரு தேசிய நான்குவழிச் சாலையை, 634 கோடி ரூபாய் செலவில், ஆறுவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தட சாலை விரிவாக்கத்திற்கு, 795 கோடி ரூபாய் செலவில், சாலை விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.

Tags:    

Similar News