வெளிமாநிலப் பதிவு: ஆம்னி உரிமையாளர்கள் முடிவு

வெளிமாநிலப் பதிவு ஆம்னி பேருந்துகளுக்கு மேலும் 3 மாதம் பர்மிட்டை நீட்டிக்குமாறு கோரிக்கை வைக்க ஆம்னி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

Update: 2024-06-17 16:53 GMT

கோப்பு படம் 

தமிழகத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கான காலக்கெடு நாளை காலையுடன் முடிவடைகிறது.. வெளி மாநில பதிவெண்ணுடன் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் நாளை இரவு முதல் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது போக்குவரத்துத்துறை அமைச்சர் ,

போக்குவரத்து ஆணையரை நாளை பிற்பகல் சந்திக்க ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கான பர்மிட்டை மேலும் 3 மாதம் நீட்டிக்குமாறு அரசிடம் கோரிக்கை வைக்க ஆம்னி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். 

  தமிழக பதிவெண்ணுக்கு மாறும் வகையில் 3 மாதம் பர்மிட்டை நீட்டித்துத் தருமாறு அரசிடம் கோரிக்கை வைக்க ஆம்னி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News