கொடைக்கானலில் பற்றி எரியும் காட்டு தீ!
கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் பற்றி எரியும் காட்டு தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறுகின்றனர்.;
Update: 2024-04-27 00:51 GMT
கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் பற்றி எரியும் காட்டு தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறுகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் கடும் வெப்பம் நிலவி வருகின்றது,இதனால் செடி,கொடிகள்,புல்வெளிகள்,முன் புதர்கள் காய்ந்து உள்ளன, இதன் காரணமாக வருவாய் நிலங்கள்,தனியார் தோட்டப்பகுதிகள்,வனப்பகுதிகளில் தீ பற்றி எரிந்து வருகிறது, இந்நிலையில் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான பூம்பாறை,மன்னவனூர்,கூக்கால் உள்ளிட்ட மலைக்கிராமங்களுக்கு செல்லும் சாலைகளின் ஓரங்களிலும், வனப்பகுதிகளிலும் இன்று பிற்பகல் வேளை முதல் காட்டு தீயானது கொழுந்து விட்டு எரிந்து வருகிறது, இதனால் அரிய வகை மரங்களும்,மூலிகை செடிகளும் எரிந்து வருகிறது,மேலும் வனப்பகுதிக்குள் வாழும் வன விலங்குகளும்,பறவை இனங்களும் இடம் பெயரும் சூழல் ஏற்பட்டுள்ளது, இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டுனர்கலும் இந்த சாலையில் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர், மேலும் தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர், இருப்பினும் தீ கட்டு கட்டுக்கடங்காமல் கொளுந்து விட்டு எரிந்து வருவதால் தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர், இதனை மாவட்ட வனத்துறை கவனம் செலுத்தி பற்றி எரிந்து வரும் தீயை அணைக்க பல புதிய முயற்சிகளை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.