தைலாராமன் மலைக்கோவில் வனப்பகுதியில் காட்டு தீ

பெரியகுளம் அருகே உள்ள தைலாராமன் மலைக்கோவில் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து சேதம் அடைந்தன.

Update: 2024-03-13 07:30 GMT

 தேனி மாவட்டத்தில் பெரியகுளம் அருகே உள்ள தைலாராமன் மலை கோவிலை சுற்றி அரியவகை மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் உள்ள வனப்பகுதி உள்ளது. இந்நிலையில் கொவிலை சுற்றி உள்ள வனப்பகுதியில் சமூக விரோதிகள் வைக்கப்பட்ட தீயால் கோயிலை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட ஏக்கர் வனப்பகுதி தீயால் எறிந்து சேதம் அடைந்துள்ளது.

மேலும் தொடர்ந்து எரிந்து வரும் தீயால் மலைக்கோவிலை சுற்றி உள்ள மீதம் உள்ள வனப்பகுதியும் எரிந்து வருகின்றது. கோவிலை சுற்றி உள்ள வனப்பகுதியில் தொடர்ந்து எரிந்த தீயால் அரியவகை மூலிகை செடிகள் மற்றும் அரியவகை மரங்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்து வருகின்றன.

இயற்கை வளங்களை பாதுகாக்க கோவில் வனப்பகுதியில் தீ வைக்கும் சமூக விரோதிகளை கண்டு பிடித்து கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கோவிலை சுற்றி உள்ள வனங்களை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வளர்களும் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News