முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு நாரியமங்கலத்தில் அதிமுக சார்பில் கோல போட்டி நடைபெற்றது.;
Update: 2024-02-26 05:27 GMT
பரிசு வழங்கல்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு கீழ்பெண்ணாத்தூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட நாரியமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற கோல போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான எஸ்.இராமச்சந்திரன் பரிசுகள் வழங்கினார். அருகில் வடக்கு ஒன்றியச் செயலாளர் சி.தொப்பளான், எம்எல்ஏக்கள் வி.கண்ணன், டி.சுரேஷ்குமார் மற்றும் பலர் உள்ளனர்.