மறைந்த அதிமுக கட்சி நிர்வாகியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் அமைச்சர்.
சிவகாசி அருகே மறைந்த அதிமுக கட்சி நிர்வாகியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் அமைச்சர்.
Update: 2024-02-25 05:21 GMT
விருதுநகர் மாவட்டம் , சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல்,அதிமுக கட்சியின் முன்னாள் நகர செயலாளரும், அதிமுக கட்சியின் மூத்த உறுப்பினருமான ஜி.வேல்சாமி தேவர்,வயது முதிர்வு காரணமாக மரணமடைந்தார். அவரது மறைவு செய்தியைக் கேட்ட, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, வேல்சாமி தேவர் வீட்டிற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இறந்த வேல்சாமி தேவரின் மகனும்,திருத்தங்கல் மேற்கு பகுதி அதிமுக செயலாளருமான சரவணக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆறுதல் கூறினார்.உடன் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.