முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு ஆகஸ்ட் 2-ஆம் தேதி ஒத்திவைப்பு!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2024-07-13 04:53 GMT

விஜயபாஸ்கர்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரான சி. விஜயபாஸ்கர், அதிமுக ஆட்சியில் 2013 முதல் 2021ஆம் ஆண்டு வரை 8 ஆண்டுகள் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார்.

அப்போது, அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 35. 79 கோடி சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு நீதிபதி ஜி. சுபத்ராதே முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. விஜயபாஸ்கர் தரப்பு வழக்குரைஞர்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு தரப்பில் வழக்குரைஞர் ஆகியோர் ஆஜராகினர்.

வழக்கு ஆவணங்களைக் கேட்ட அமலாக்கத் துறை வழக்குரைஞர் இணையவழியில் ஆஜரானார். அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்யாமல் நேரடியாக ஊழல் வழக்கு ஆவணங்களைக் கேட்க முடியுமா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி சுபத்ராதேவி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags:    

Similar News