தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் !
புதுக்கோட்டை தேர்தல் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-29 06:33 GMT
விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை ஆலங்குடி ரோட்டில் திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை தேர்தல் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் முன்னதாக விழாவிற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. இதனை அடுத்து தேர்தல் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மலர் மாலைகள் பொன்னாடைகள் போற்றப்பட்டன. பின்னர் மேட்டுப்பட்டிக்கு பிரச்சாரத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக வேட்பாளர் கருப்பையாவிற்கு அப்பகுதி பொதுமக்கள் ஆரத்தி எடுத்தினார்கள் .