போக்ஸோ வழக்கில் முன்னாள் எம்எல்ஏ விடுதலை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனை விடுதலை செய்து நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்ட்டது.

Update: 2024-06-27 08:25 GMT

முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்  2020 ஆம் ஆண்டு கோட்டாறு பகுதியை சேர்ந்த பத்தாவது வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி மாயமானார். மாணவியின்  தந்தை அளித்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார்  சிறுமியை  அவரது 20 வயது காதலனுடன் கைது செய்தனர். சிறுமி  மைனர் என்பதால் காதலன்  மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.       அப்போது சிறுமி தன்னை அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் உட்பட சிலர் பலாத்காரம் செய்ததாக கூறினார். 

கடந்த 2017 ஆம் ஆண்டு தனது தாயார் தன்னை நாஞ்சில் முருகேசன் உடன் அழைத்து சென்றதாகவும், அப்போது முருகேசன் மற்றும் மூன்று பேர் தன்னை இரண்டு ஆண்டுகளாக பலாத்காரம் செய்து வந்ததாகவும் அந்த சிறுமி கூறினார்.   நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில்  நாஞ்சில் முருகேசன் (60)  பால் (66) அசோக்குமார் (43) கார்த்திக் மற்றும் சிறுமியின் தாயார் உட்பட 5 பேர்  மீது போக்சா உளளிட்ட  எட்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.    இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் மாவட்டம் முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தின் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் பலர் பிறழ் சாட்சிகளாக மாறினார். இதை அடுத்து நீதிபதி கார்த்திகேயன் நேற்று நாஞ்சில் முருகேசன் உட்பட ஐந்து பேரை விடுதலை செய்து  தீர்ப்பு வழங்கினார்.

Tags:    

Similar News