தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் 122 வது பிறந்தநாள் - கரூர் மாவட்ட நாடார் ஐக்கிய சங்கம் மரியாதை
தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் 122 வது பிறந்தநாள். கரூர் மாவட்ட நாடார் ஐக்கிய சங்கம் மரியாதை.;
Update: 2024-07-15 06:38 GMT
காமராஜர் பிறந்தநாள்
தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் 122 வது பிறந்தநாள். கரூர் மாவட்ட நாடார் ஐக்கிய சங்கம் மரியாதை. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், கல்விக்கு கண் திறந்த காமராஜர் 122 வது பிறந்த நாள் இன்று. அவரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அமைப்பினர் இன்று கொண்டாடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்ட நாடார் ஐக்கிய சங்க தலைவர் ஆர் கண்ணன் தலைமையில், கரூர் ஜவகர் பஜார் பகுதியில் உள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர்கள் தூவியும் மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் செயலாளர் ஜஸ்டின், பொருளாளர் ஹை கோர்ட் முத்து, துணைச் செயலாளர்கள் ஆனந்த சேகர், சண்முகராஜ், சங்க நிர்வாகிகள், தொழிலதிபர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும், கர்மவீரர் காமராஜர் புகழைப் போற்றும் வகையில் பல்வேறு கோஷங்களை எழுப்பி வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழாவை சிறப்பித்தனர்.