சிவகாசி அருகே தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்த நாள் விழா...

சிவகாசி அருகே தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்த நாள் விழா...

Update: 2024-06-03 11:52 GMT
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் மாநகர திமுக சார்பாக கலைஞர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது மாநகர செயலாளர் எஸ்.ஏ.உதயசூரியன்,மேயர் சங்கீதா இன்பம் கலைஞரின் திருவுருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் 101 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதிலும் இன்று முதல் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. சிவகாசி மாநகர திமுக சார்பாக திருத்தங்கல்லில்கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாநகர செயலாளர் எஸ்.ஏ.உதயசூரியன் மேயர் சங்கீதாஇன்பம் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.நிகழ்ச்சியில் மாநகர பகுதி கழக செயலாளர்கள் காளிராஜன்,மாரீஸ்வரன்,கருணாநிதி பாண்டியன்,திருத்தங்கல் முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் பொன்சக்திவேல்,மாநகராட்சி மண்டல குழு தலைவர் குருசாமி,மாவட்ட வர்த்தக அணி இன்பம்,கவுன்சிலர் சேதுராமன் மற்றும் திமுகவின் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News