ஸ்ரீவில்லிபுத்தூரில் தாலுகா அலுவலகம் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தாலுகா அலுவலகம் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா பணியை அமைச்சர் துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய தாலுகா அலுவலகம் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா பணியை துவக்கி வைத்துள்ளோம்.இந்த கட்டிடத்தின் மொத்த தொகை 5 கோடியே முப்பது லட்சம் ஆகும். இந்த கட்டிடப் பணி நிறைவு அடைய 11 மாதங்களிலிருந்து ஒரு வருடத்திற்குள் ஆகும்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் துவக்கப்பட்டது.13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. விரைவில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள வருகிறோம். வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர் போராட்டம் நடத்துகின்றனர்.அந்த துறையில் அமைச்சராகிய உங்களின் பதில் என்ன கேள்விக்கு..
போராட்டம் நடத்திக் கொண்டே தான் இருப்பார்கள் நாங்கள் காரியத்தை முடித்து கொண்டே தான் இருப்போம் குறைகள் மனிதருக்கு எல்லோருக்கும் உண்டு நான்கு குறைகளை சொன்னால் அதில் இரண்டு குறைகளை முடித்துக் கொடுக்கிறோம். அரசாங்கத்தில் தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைப்பது தமிழக முதலமைச்சர் வந்த பின்பு உண்ணாவிரத போராட்டமோ அறிவிப்போ வந்த பிறகு தங்களிடம் கேட்டு நடவடிக்கை எடுக்க சொல்லக்கூடிய முதலமைச்சராக இருக்கிறார்.
இதுவரை இல்லாத அளவிற்கு தாசில்தார்கள் பணி நியமனம் செய்துள்ளோம் தாசில்தார் சங்கங்கள் எல்லாம் சந்தோசமாக உள்ளது.சென்ற அரசாங்கத்துடன் இந்த அரசாங்கம் நல்ல முறையில் செய்து கொண்டிருக்கிறது. தமிழக அரசின் முத்திரை சின்னம் இருக்கும் ஆண்டாள் கோவிலில் பார்க்கிங் வசதி இல்லை என்ற கேள்விக்கு..
வியாபாரிகள் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்களை ஏன் கெடுக்கிறீர்கள். இது சம்மதமாக இந்து சமய அறநிலையத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்தப்படும். ஆண்டாள் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் சுகாதார வளாக வசதி இல்லை,
ஆண்டாள் கோவிலில் கொடி மரங்கள் யானை சிலைகள் மாயமான நிலையில் இது குறித்த கேள்விக்கு ஆண்டாள் கோவிலில் ஒரு நாள் ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்தார்.