கே.பந்தாரப்பள்ளி கிராமத்தில் அரசு கல்லூரி அமைக்க அடிக்கல்

நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி கிராமத்தில் 15 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.;

Update: 2024-03-16 10:57 GMT

கல்லூரி அமைக்க அடிக்கல்

 திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கே. பந்தரப்பள்ளி கிராமத்தில் 15 கோடியே 30 லட்சம் மதிப்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் கட்டும் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் ஆகியோர் இன்று பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார். இந்த கல்லூரி கட்டிடம் சுமார் 4609 சதுர மீட்டர் அளவில் இரண்டு தளங்கள் அமைக்கப்பட உள்ளது.

Advertisement

இதில் முதல்வர் அறை, அலுவலக அறை, மாணவர் கூட்டுறவு அங்காடி, பதிவு அறை, நூலகம் மற்றும் அடுக்கு அறை, சுகாதார மையம் அறை, வேதியில ஆய்வகம் மற்றும் கழிவறைகள் வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. மேலும் அதேபோல் முதல் தளத்தில் ஆறு வகுப்பறைகள், இரண்டு துணைத்தலைவர் அறை கணினி அறை ஆய்வகங்கள், கருத்தரங்கு கூடம், மேலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி சாய்தள வசதி, மேலும் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி, தீயணைப்பு சாதன வசதி, அறுகு சாலை வசதி உள்ளிட்டவையும்‌ அமைக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் திமுக திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார், ஜோலார்பேட்டை ஒன்றிய சேர்மன் சத்யா சதீஷ், நாட்றம்பள்ளி ஒன்றிய சேர்மன் வெண்மதி முனுசாமி, அரசு துறைச் சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News