இழப்பீடு வழங்காததால் நான்கு அரசு பேருந்துகள் ஜப்தி

திருச்சியில் இழப்பீடு வழங்காததால் நான்கு அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டதால் பரபரப்பு உண்டானது.

Update: 2024-03-06 03:46 GMT

திருச்சியில் இழப்பீடு வழங்காததால் நான்கு அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டதால் பரபரப்பு உண்டானது. 

திருச்சி புத்தூர் ரயில்வே ரோடு பகுதியை சேர்ந்தவர் முகமது சாதிக். 2020 ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி அதே பகுதியில் உள்ள கீதா நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பேருந்து ஏறினார் அப்போது டிரைவர் பஸ் இயக்கிய போது தடுமாறு கீழே விழுந்தது அவரது கால் எலும்பு முறிந்தது. இதுகுறித்து வடக்குப் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்றாவது சப் கோர்ட்டில் வளர்ப்பு நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சோமசுந்தரம் பாதிக்கப்பட்டவருக்கு ரூபாய் நாலு லட்சத்து 27 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்

இந்த தொகை வழங்கப்படாததால் கோர்ட் அவமதிப்பு வழக்கில் நீதிபதி உத்தரவின் பெயரில் அரசு பேருந்து நேற்று ஜப்தி செய்யப்பட்டது அதேபோல் துறையூா் சாா்பு- நீதிமன்றத்தில் மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு கோரி அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுப்படி பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் துறையூா் சாா்பு நீதிபதி ஜெய்சங்கா் அரசு பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து நீதிமன்ற பணியாளா்கள் கணேசன் மற்றும் மணிகண்டன் செவ்வாய்க்கிழமை துறையூா் பேருந்து நிலையத்துக்கு சென்று விபத்தில் தொடா்புடைய 3 பேருந்துகளை ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்துக்கு கொண்டு வந்தனா்

Tags:    

Similar News