சுசீந்திரம் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால பூஜை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா நாளை வெள்ளிக்கிழமை நடக்கிறது.

Update: 2024-03-07 04:06 GMT
சுசீந்திரம் கோவில் (பைல் படம் )

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா நாளை வெள்ளிக்கிழமை நடக்கிறது. இரவு 10 மணியளவில் முதலில் கொன்றையடி  நாதருக்கு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து மூலவராகிய தாணுமாலய சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.    

இரவு 11 மணிக்கு தாணுமாலய சாமிக்கு பால், தயிர், நெய், தேன், இளநீர், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் ஆகிய எட்டு விதமான பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சுவாமிக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு முதல் கால பூஜை நடக்கிறது. தொடர்ந்து நள்ளிரவு 12:30 மணிக்கு இரண்டாவது கால பூஜை, 1.30-க்கு மூன்றாம் கால பூஜை,  2.30  மணிக்கு நான்காம் கால பூஜை நடக்கிறது.

ஒவ்வொரு கால பூஜை நடக்கும்போதும் அபிஷேகங்கள் செய்யப்பட்டு தங்க அங்கி சார்த்தி சாமிக்கு தீபாராதனை காட்டப்படும்.     சிவராத்திரி முன்னிட்டு இரவு முழுவதும் கோவில் நடை திறந்தே இருக்கும். சிவாலய ஓட்டத்தில் பங்கேற்று ஓடிய பக்தர்கள் இறுதியாக சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய வருவார்கள்.

Tags:    

Similar News