ஒருநாளில் நான்கு இருசக்கர வாகனங்கள் திருட்டு - காவல்துறையினர் விசாரணை
பல்வேறு இடங்களில் நிறுத்தபட்டுருந்த நான்கு இருசக்கர வாகனங்கள் திருட்டு.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திர மவுலீஸ்வரன்.தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் சிகிச்சைக்காக தன் தந்தையை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.நேற்று தனது தந்தையை காண வந்தவர் அரசு மருத்துவமனை நுழைவாயில் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தந்தையை பார்க்க சென்றுள்ளனர்.திரும்பி வந்து பார்க்கையில் தனது வாகனம் நிறுத்தபட்ட இடத்தில் பைக் இல்லாததை கண்டவர் அக்கம் பக்க பகுதிகளில் தேடி பார்த்தும் கிடைக்காததால் இதுகுறித்து பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செட்டிபாளையம் வடிவு நகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார்.இவர் தனது வீட்டின் முன் தேனீர்க்கடை நடத்தி வருகிறார்.நேற்று மதியம் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தி வைத்துவிட்டு ஓய்வெடுக்க சென்றுள்ளார்.திரும்பி வந்த பார்த்தபோது தனது வாகனம் திருடப்பட்டுருப்பதை அறிந்தவர் இதுகுறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குனியமுத்தூர் சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி. எஸ்.பி.ஐ வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்.
இவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தி சென்றுள்ளார்.சிறிது நேரத்திற்கு பின் வெளியே வந்து பார்த்தபோது வாகனம் திருடப்பட்டுருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் இதுகுறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ்குமார் பணி நிமித்தமாக திருப்பூர் செல்ல வேண்டியதால் தனது இரு சக்கர வாகனத்தை காந்திபுரம் பேருந்து நிலை பின்புறம் நிறுத்துவிட்டு திருப்பூர் சென்றுள்ளார்.திரும்பி வந்து பார்த்தவர் பைக் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் இதுகுறித்து காட்டூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் வெவ்வேறு இடங்களில் வாகனங்கள் திருடபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.