சங்கலிங்கபுரம் கிராமத்தில் ஏல சீட்டு நடத்தி மோசடி

சங்கலிங்கபுரம் கிராமத்தில் ஏல சீட்டு நடத்தி அதில் ஏமாந்த 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2024-07-01 15:18 GMT
விருதுநகர் அருகே தனியார் நிதி நிறுவனம் கடந்த 1990ஆம் ஆண்டு முதல இயங்கி வந்து கொண்டிருந்தது.இந்த நிதி நிறுவனத்தை நம்பி நூற்றுக்கு மேற்பட்டோர் இலட்சக்கணக்கில் பணம் கட்டி வந்துள்ளதாகவும் அவர்களுக்கு சரியான முறையில் கட்டிய தொகையை இந்த நிதிநிறுவனம் கொடுத்து வந்துள்ளதாகவும் தெரிகிறது ஆகையால் இந்த நிதி நிறுவனத்தை நம்பி பல பேர் சீட்டு கட்டி வந்துள்ளனர். ஆனால் கடந்த ஆறு மாத காலமாக இந்த நிதிநிறுவனம் மூலம் வசூல் செய்து வந்த சங்கர்குமார், வீரமணி ஆகிய இருவரையும் தொடர்பு கொல்ல முயற்சிக்கும் பொழுதெல்லாம் அவர்கள் போனை சுவிட்ச ஆப் செய்துள்ளதாகவும், மேலும் நிதிநிறுவனத்திற்கு நேரில் சென்றால் அந்த நிதி நிறுவனமும் பூட்டியே உள்ளதாகவும் தெரிவித்தனர். ஆகையால் எங்களிடம் பணம் வசூல் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தாங்கள் கட்டிய தொகையை உடனடியாக வாங்கித் தருமாறு இன்று மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் சங்கிலிங்கபுரத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோரிக்கை மனுவினை அளித்தனர்
Tags:    

Similar News