போலி வாரிசு சான்றிதழ் கொடுத்து முறைகேடு
போலி வாரிசு சான்றிதழ் கொடுத்து முறைகேடு. கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு.
Update: 2024-06-01 06:08 GMT
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா மேமாளூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 50) என்பவர் தனது உறவினர்களுடன் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அம்மனுவில் கூறியிருப்பதா வது:- மணம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். ஓய்வுபெற்ற அரசு ஊழியர். அவரது மனைவி வாடாமல்லி. இவர் கடந்த 14.3.2021 அன்று இறந்துவிட்டார். இறந்த எங்கள் சகோதரியான வாடாமல்லிக்கு குழந்தைகள் ஏதும் இல்லை. மேலும் தனக்கு வாரிசாக அவர் யாரையும் நியமிக்கவும் இல்லை. இந்நிலையில் வாடாமல்லி இறந்த பிறகு, அவரது வாரிசுகள் என குறிப்பிட்டு, போலியான வாரிசு சான்றிதழ் எடுத்து, வாடாமல்லியின் சொத்துக்களை விற்றுள்ளனர். இதனால், வருவாய்த்துறையினர் போலியாக வழங்கிய வாரிசு சான்றிதழை ரத்து செய்ய வேண்டும். அதற்கு உறுதுணையாக இருந்த அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அம்மனுவில் கூறியிருந்தனர்.