வேலை வாங்கித் தருவதாக பூ வியாபரிடம் ரூபாய் 4.85 லட்சம் மோசடி - 2 வாலிபர்கள் கைது

பிரம்மபுரத்தில் மகனுக்கு வேலை வாங்கித் தருவதாக பூ வியாபாரியிடம் ரூபாய் 4.85 லட்சம் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது.;

Update: 2024-03-20 10:49 GMT

 தினேஷ்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பிரம்மபுரத்தைச் சேர்ந்தவர் ஆதிவாசன் ( பூ வியாபாரி. இவர் மேட்டுக்கடை பகுதியில் பூக்கடை நடத்தி வருகிறார். இங்கு முத்தலக்குறிச்சியை சேர்ந்த தினேஷ் (30) என்பவர் அடிக்கடி வந்துள்ளார். அப்போது ஆதிவாசனுக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. தனக்கு பொங்களூரூவில் முக்கிய நிறுவனங்களை தெரியும் என தினேஷ் கூறியுள்ளார்.  2 இதனை நம்பிய ஆதிவாசன், டிப்ளமோ என்ஜினீயரான தனது மகனுக்கு வேலை வாங்கித் தருமாறு கூறி உள்ளார்.

Advertisement

இதனை தொடர்ந்து வேலைக்காக 2 தவணைகளாக ஆதிவாசன் ரூ.4 லட்சத்து 85 ஆயிரம். கொடுத்துள்ளார். அதனைபெற்றுக் கொண்ட தினேஷ். வேலை எதையும் வாங்கிக் கொடுக்க வில்லை. மேலும் ஆதிவாசனை சந்திப்பதையும் தவிர்த்துள்ளார். இதற்கிடையில் தினேசின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து தான் மோசடி செய்யப்பட்டதைஅறிந்த ஆதிவாசன், தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை வந்தனர்.

இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் விடுதியில் தினேஷ் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அவரைமடக்கி பிடித்தனர். அவருடன் இருத்து ஜெயங்கொண்டான் ஜெயராஜ் (36) என்பவரையும் போலீசார் பிடித்தனர். அவர்கள் 2 பேரையும் தக்கலை அழைத்து வந்துபோலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News