கூட்டுறவு கடன் சங்கத்தில் மோசடி : துணை பதிவாளர் விசாரணை!

கலுங்குவிளை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு தொடர்பாக வாடிக்கையாளர்கள் அளித்த புகார் குறித்து கூட்டுறவு துணை பதிவாளர் சக்தி பெமிலா விசாரணை நடத்தினார்.;

Update: 2024-05-21 07:02 GMT

அதிகாரிகள் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கலுங்குவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு தொடர்பாக சங்க செயலாளர் அகமது, ஊழியர்கள் அமுதா, சுப்பிரமணியன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சங்கத்தை நிர்வாகிக்க பொறுப்பு அதிகாரிகளாக சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலர் எட்வின் தேவாசீர்வாதம், ராமகிருஷ்¢ணன், முத்துக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

இந்நிலையில் கடந்த 18ஆம்தேதி முறைகேடு தொடர்பாக கூட்டுறவு அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது சங்க வாடிக்கையாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் சங்க அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதுதொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன், உதவி ஆய்வாளர் எட்வின் அருள்ராஜ், ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி 20 ஆம்தேதி சங்க அலுவலகத்தில் வைத்து கூட்டுறவு அதிகாரிகள் மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதனையடுத்து கலுங்குவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு துணை பதிவாளர் சக்தி பெமிலா, புகார் தெரிவித்த வாடிக்கையாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர்களை அழைத்து சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் , எட்வின் அருள்ராஜ் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தினார். கோமானேரி ஊராட்சி துணைத் தலைவர் ஐக்கோர்ட் துரை, சாலைபாதுகாப்பு நுகர்வோர் குழு உறுப்பினர் போனிபாஸ், முன்னாள் சங்க துணைத் தலைவர் இசக்கிமுத்து, ஒய்வு பெறற கால்நடை மருத்துவர் அனந்த பெருமாள், வடக்கு ஒன்றிய திமுக அவைத் தலைவர் பால்ராஜ் உள்ளிட்ட மகளிர் சுய குழுவினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News