ஆன்லைன் மூலம் பெண்ணிடம் பணம் மோசடி
காரைக்குடியில் பகுதி நேர வேலை தருவதாக ஆன்லைன் மூலம் பெண்ணிடம் பணம் மோசடி - போலீசார் விசாரணை;
By : King 24x7 Angel
Update: 2024-02-17 08:43 GMT
ஆன்லைன் மூலம் பெண்ணிடம் பணம் மோசடி
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்தவர் காந்தி உமையாள். இவர் ஆன்லைனில்பகுதி நேர வேலை தேடியுள்ளார். அப்போது ஒரு வாட்ஸ் ஆப் எண்ணில் இருந்து பகுதி நேர வேலை தருவதாக கூறி காந்தி உமையாளுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதை நம்பி அந்த நபரை காந்தி உமையாள் தொடர்பு கொண்டுள்ளார். அவர் கூறியபடி காந்தி உமையாள் வங்கி கணக்கிற்கு 7 தவணைகளாக ரூ.6 லட்சத்து 16 ஆயிரத்து 858 அனுப்பியுள்ளார். பணத்தை பெற்றுகொண்ட அந்த நபர் வேலை தராமல் ஏமாற்றியுள்ளார். காந்தி உமையாள் சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் வங்கி எண்ணைக் கொண்டு ஏமாற்றிய நபரை தேடிவருகின்றனர்.