வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி !
வேலை வாங்கித் தருவதாக கூறியதால் ரூபாய் 10 லட்சத்து 70 ஆயிரத்தை மோசடி நடந்து விட்டதாக தெரிய வந்தது. எனவே நான் கொடுத்த பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் மனு அளித்துள்ளனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-05 05:35 GMT
மனு
கன்னியாகுமரி மாவட்டம் மஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்தவர் ரசலையா (50) தொழிலாளியான இவர் நேற்று தன் குடும்பத்தினருடன் நாகர்கோவில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வந்து ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நாகர்கோவிலில் வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் காரங்காடு பகுதியை சேர்ந்த ஒருவர் எனக்கு அறிமுகமானார். அந்த நிறுவனம் மூலம் வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்புவதாக கூறினார். இதை நம்பி எனது மகளின் சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு அந்த நிறுவனத்திற்கு சென்று, கனடாவில் வேலை வாங்கித் தருவதாக கூறியதால் ரூபாய் 10 லட்சத்து 70 ஆயிரத்தை அவர்கள் வங்கிக் கணக்கிலேயே செலுத்தினேன். ஆனால் வேலை வாங்கி தரவில்லை. இதில் மோசடி நடந்து விட்டதாக தெரிய வந்தது. எனவே நான் கொடுத்த பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.