ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி: தொழிலதிபர் மீது புகார்

திருச்சியில் ஏலச்சீட்டு மற்றும் பண்டிகை ஃபண்ட் நடத்தி சுமார் 2 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொழில் அதிபர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-02-05 04:14 GMT

திருச்சியில் ஏலச்சீட்டு மற்றும் பண்டிகை ஃபண்ட் நடத்தி சுமார் 2 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொழில் அதிபர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி பாலக்கரை வேர்ஹவுஸ் செங்குளம் காலனி ரோடில் உள்ள வி.வி.எல்.பி வணிக வளாகத்தில் அலுவலகம் நடத்தி வந்தவர் ராஜா. மேலும் இவர் பாலக்கரை காவேரி திரையரங்கம் அருகே டீக்கடையும் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் ஏலச்சீட்ட, தீபாவளி, அட்சயத்திருதி ஃபண்டு போன்றவை நடத்தியுள்ளார்.

நூற்றுக்கணக்கானவர்களிடம் இருந்து இதற்காக பணம் வசூல் செய்துள்ளார். இந்த வகையில் உறுதி அளித்தபடி அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த மக்கள் அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அலுவலகம் பூட்டி இருந்தது தெரியவந்தது. டீக்கடையும் பூட்டி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சுமார் 2 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்திருக்கலாம் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News