மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பட்டா வழங்க கோரிக்கை
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ;
By : King 24x7 Website
Update: 2023-12-12 07:38 GMT
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேதாஜி விவேகானந்தா சேவா சங்கம் மாற்றுத்திறனானிகள் அணி, இயற்கை பாதுகாப்பு அணி, முதியோர் முன்னேற்ற அணி அமைப்பினர் மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவில் "மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பட்டா வேண்டி சுமார் 200க்கும் மேற்பட்டோர் மனு வழங்கினோம். உண்ணாவிரதப் போராட்டம் உட்பட பல போராட்டங்களை நடத்தியுள்ளார். கடந்த செப்.29ல், தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடத்தினோம். அப்போது வட்டாட்சியர்கள் 1 வார காலத்திற்குள் SC மாற்றுத் திறனாளிகளுக்கு பட்டா வழங்க முழு நடவடிக்கை எடுக்கப்படும். 10 நாட்களுக்குள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலமாக மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார். தொடர்ந்து பட்டா வழங்காமல் தாமதிப்பதால் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.