அரசு பள்ளிகளில் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி
குமாரபாளையம் அருகே அரசு பள்ளிகளில் இலவச மிதிவண்டிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.;
Update: 2023-12-23 09:19 GMT
அரசு பள்ளிகளில் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் அரசினர் மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி, பள்ளியின் பி.டி.ஏ. தலைவர் சௌந்திரம் தலைமையில் நடந்தது. இதில் தலைமை ஆசிரியர் முருகவேல் வாழ்த்தி பேசினார். சிறப்பு விருந்தினராக, பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய செயலாளரும் பள்ளியின் பி.டி.ஏ. துணை செயலாளருமான நாச்சிமுத்து பங்கேற்று, 40 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பி.டி.ஏ. துணை தலைவர் புலவர் பெரியசாமி, பொருளாளர் துரைசாமி மற்றும் ஆசிரியர்கள் பலரும் பங்கேற்றனர். இதே போல் குள்ளநாயக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 70 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கபட்டது இதில் குப்பாண்டபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா மற்றும் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.