மஷார் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா
திருவண்ணாமலை மாவட்டம்,மஷார் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 84 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.
கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் மஷார் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 84 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டியை பள்ளி மேலாண்மை குழு தலைவர் தாரணி கருணாநிதி , பஞ்சாயத்து தலைவர் லட்சுமி கேசவாபாண்டி நேற்று வழங்கினார் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் மஷார் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 49 மாணவர்களுக்கும் 35 மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டியை வழங்கி பேசியதாவது,
மஷார் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. மேலும் தமிழக மக்களுக்காகவும் படிக்கும் மாணவர்களுக்காகவும் எண்ணற்ற திட்டங்களை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கி வருகிறார்.
அதில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி , இலவச பேருந்து பயண , இல்லம் தேடிக் கல்வி , எண்ணும் எழுத்தும் , கற்றல் கற்பித்தல் , நான் முதல்வன் என்ற பல்வேறு திட்டங்களை மாணவர்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது என்று பள்ளி மேலாண்மை குழு தலைவர் தாரணி கருணாநிதி தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்ட இருபால் ஆசிரியர்களும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும் நிர்வாகிகளும் ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளும் தொண்டர்களும் மற்றும் மூத்த முன்னோடிகளும் கிளைக் கழக செயலாளர்களும் பள்ளி அலுவலக பணியாளர்களும் பொதுமக்களும் மாணவ மாணவிகளும் பலர் கலந்து கொண்டனர்.
கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் அருகே மஷார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 84 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டியை பள்ளி மேலாண்மை குழு தலைவர் தாரணி கருணாநிதி மற்றும் பஞ்சாயத்து தலைவர் லட்சுமி கேசவபாண்டி வழங்கினார். உடன் பள்ளி தலைமை ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.