இலவச தோல் மருத்துவ சிகிச்சை முகாம்!

புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் உலக தோல் ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு இந்திய தோல் மருத்துவர் சங்கம் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் இலவச சிகிச்சை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Update: 2024-07-09 04:46 GMT

மருத்துவ சிகிச்சை முகாம்

புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் உலக தோல் ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு இந்திய தோல் மருத்துவர் சங்கம் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் இலவச சிகிச்சை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்விக் குழுமத் தலைவர் குரு. தனசேகரன் தலைமை வகித்தார். மருத்துவர் டி. கிருஷ்ணராஜ் தொடக்கவுரையாற்றினார். தோல் நோய் மருத்துவர் மற்றும் அழகு சிகிச்சை நிபுணர் வே. ரம்யா மாதுரி கலந்து கொண்டு மாணவிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டார்.

தொடர்ந்துநடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசினார். முன்னதாக மருத்துவ நிர்வாகத் துறை பேரா. ப. பிரிசில்லா வரவேற்றார். முடிவில் மனையியல் துறை பேரா.எம். லாவண்யா நன்றி கூறினார்.

Tags:    

Similar News