இலவச கண் சிகிச்சை முகாம்
தென்காசி மாவட்டம், ஊத்துமலை ஊராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.;
Update: 2024-05-13 01:26 GMT
இலவச கண் சிகிச்சை முகாம்
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே ஊத்துமலை ஊராட்சியில் தாமரை தொண்டு நிறுவனம், வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் மற்றும் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் பாஜக ஆலங்குளம் வடக்கு ஒன்றிய தலைவர் டாக்டர் அன்புராஜ் தலைமையில் நடைபெற்றது . 20 நபர்களுக்கு அறுவைசிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இந்த முகாமினை ஆனந்தன் அய்யாசாமி துவக்கி வைத்தார்கள். மணிகண்டன், சொர்ணராஜ் ,மாரிச்செல்வம், காளிச்சாமி, மாரியப்பன்,மனுவேல்ஞானராஜ், கைகண்டார்,வெள்ளதுரை கலந்து கொண்டு சிறப்பித்தனர்.