இலவச கண் பரிசோதனை முகாம்
தென்காசி மாவட்டம், நடுவக்குறிச்சியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.;
Update: 2024-05-27 04:31 GMT
கண் பரிசோதனை முகாம்
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து தென்காசி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பாக 7 வது ஆண்டு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இதில் நடுவக்குறிச்சியில் உள்ள சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களது கண்களை பரிசோதனை மேற்கொண்டு கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் மருத்துவர்களும் கலந்து கொண்டனர்