தமிழ் பல்கலைக்கழகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் 

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கண் பரிசோதனை முகாமில் பலர் கலந்துகொண்டு பலனடைந்தனர்.

Update: 2024-03-19 15:22 GMT

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கண் பரிசோதனை முகாமில் பலர் கலந்துகொண்டு பலனடைந்தனர்.


தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் வாஸன் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவசக் கண் பரிசோதனை முகாம்  திங்கள்கிழமை நடைபெற்றது.   துணைவேந்த வி.திருவள்ளுவன் தலைமை வகித்து, இலவச கண் பரிசோதனை முகாமைத் தொடங்கி வைத்துப் பேசினார். வாஸன் மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் ஜி.கே.ஸ்ரீவித்யா பேசுகையில், கூறியதாவது, கணையம் பாதிப்பு, சர்க்கரை நோய் போன்ற குறைபாடுகள் இருந்தால் கண்புரை நோய் ஏற்படும். பார்வைக் கோளாறு, கண்ணில் இரத்த அழுத்தம் போன்ற கண்நோய் வராமல் பாதுகாக்க பரிசோதனை அவசியம்" என்றார்.  பல்கலைக் கழகப் பதிவாளர் சி.தியாகராஜன், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்  பெ.இளையாப்பிள்ளை, மக்கள் தொடர்பு அலுவலர் இரா.சு.முருகன், வாஸன் கண்மருத்துவமனை கிளை மேலாளர் ரமேஷ்  முன்னிலையில் இம்முகாம் நடைபெற்றது.  இப்பரிசோதனை முகாமில், பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள், புலத்தலைவர்கள், துறைத்தலைவர்கள், கல்வியாளர்கள், அலுவல்நிலைப் பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் 400 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Tags:    

Similar News