ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு இலவச கண் பரிசோதனை

குத்தாலத்தில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.;

Update: 2024-07-01 05:38 GMT
ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு இலவச கண்  பரிசோதனை

முகாமிற்கு வந்த பொதுமக்கள் 

  • whatsapp icon

மயிலாடுதுறை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நிதியுதவியுடன் குத்தாலம் மனிதம் அறக்கட்டளை, மயிலை இருசக்கர மோட்டார் வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கம் மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் மயிலாடுதுறை அருகே குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

மனிதம் அறக்கட்டளை பொறுப்பாளர் பூபாலன் தலைமையில் நடைபெற்ற முகாமில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது, கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளை எடுத்துக் கொண்ட பார்வை கோளாறு உள்ளிட்டவைகளுக்கு தகுந்த பரிசோதனை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் அன்றைய தினமே பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு ஐ ஓ எல் லென்ஸ், அறுவை சிகிச்சை, மருந்து, உணவு, தங்கும் வசதி மற்றும் போக்குவரத்து செலவு அனைத்தையும் இலவசமாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முகாமில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச கண் பரிசோதனை செய்து கொண்டு பயனடைந்தனர்.

Tags:    

Similar News