ஆத்தூர் : இலவச கண்சிகிச்சை முகாம் !
ஆத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் ஆத்தூர் சேவை சங்கம் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-04-08 05:08 GMT
இலவச கண் சிகிச்சை முகாம்
சேலம் மாவட்டம் ஆத்தூரில் பல்வேறு இலவச மருத்துவ முகாம்களை ஆத்தூர் ஆதித்யா சங்கம் செய்து வரும் நிலையில் ஆத்தூர் ஆதித்யா அரிமா சங்கம் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் கெட்ட பார்வை துவரப்பார்வை கண்ணில் நீர்வழிதல் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை கண்டறிந்து அவர்களுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது இந்த முகாமில் ஆத்தூர் ஆதித்யா சங்கத்தின் தலைவர் செல்வமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கண் சிகிச்சை முகாம் ஏற்பாட்டாளர் பாஸ்கரன் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.