திருமயத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்!
திருமயத்தில் ஆதிகாலத்து அலங்கார மாளிகை நிறுவனம், புதுகை ரோட்டரி கிளப், மதுரை அரவிந்த் கண் மருத்து வமனை, மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.;
இலவச கண் சிகிச்சை முகாம்
திருமயத்தில் ஆதிகாலத்து அலங்கார மாளிகை நிறுவனம், புதுகை ரோட்டரி கிளப், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
ரோட்டரி தலைவர் பசுபதி தலைமை வகித்தார். ஆதிகாலத்து அலங்கார மாளிகை நிர்வாகி செந்தில், வள்ளியப் பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமயம் ரோட்டரி தலைவர் கபூர் வர வேற்றார்.
முகாமை அரசு மேல்நிலைப் பள்ளி உதவி தலைமையாசிரியர் ஆறுமுகம் தொடங்கி வைத்தார். புதுகை ரோட்டரி முன்னாள் தலைவர் சோலை யப்பன், திருமயம் கருப்பையா, அருண், அன்புமணி, ஆடிட்டர் பழனியப்பன் மற்றும் பலர் பேசினர். முகாமில் 350 பேருக்கு கண்பரிசோதனை செய்யப் பட்டு 40 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.
விவசாயிகள் சங்க தலைவர் சத்திய மூர்த்தி நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் அமைப் பாளர் விவேகானந்தன்,ரோட்டரி திட்ட ஒருங் கிணைப்பாளர் ஆரோக்கியசாமி ஆகியோர் செய்திருந்தனர்.