இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் விழா!
சாணார்பட்டியில் 369 இலவச வீட்டுமனைப் பட்டாக்களை பயனாளிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.;
Update: 2024-03-05 07:15 GMT
அமைச்சர் சக்கரபாணி
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியில் நடைபெற்ற விழாவில் 369 இலவச வீட்டுமனைப் பட்டாக்களை பயனாளிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி இன்று வழங்கினார். விழாவில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, நாடாளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி, மாவட்ட வருவாய் அலுவலர் சே.ஹா.சேக் முகையதீன், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் சு.ப.கமலக்கண்ணன், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சு.பழனியம்மாள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.