இலவச பட்டா மனை: மாற்றுத்திறனாளிகள் மனு
இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மாற்றுத்திறனாளிகள் மாவட்ட வருவாய் அதிகாரி மேனகாவிடம் மனு கொடுத்தனர்.;
மாற்றுத்திறனாளிகள் மனு அளிப்பு
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி மேனகா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
முகாமில் தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்க மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் பலர் மனு கொடுத்தனர். இதுகுறித்து அவர்கள் கூறும் போது மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்ககோரி பலமுறை மனு கொடுத்துள்ளோம். ஆனால் நடவடிக்கை இல்லை.
எனவே எங்கள் கோரிக்கை மீது விரைந்து நடவடிக்கை எடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறினர். இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அதிகாரி மேனகா அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.